தென்மாவட்டத்தின் சிங்கம் டா நான்.. துண்டு சீட்டு நீ... திமுகவை சகட்டு மேனிக்கு சலித்தெடுத்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் எதிர்கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்ய துவங்கியுள்ளனர். அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். 

மேலும், கண்ட நாய்களுக்கு நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்றும், தெருவில் போகும் நாயை பார்த்து நாங்கள் ஏன் பயம் கொள்ள வேண்டும் என்றும் பேசியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவின் ஒட்டுமொத்த சரித்திரத்தையும் தெரிவித்து கடுமையாக பேசியுள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், " துண்டு சீட்டில் எழுதி கொடுப்பதை பார்த்து சரியாக பேச கூட தெரியாத நீ, தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்வாய். அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று கூறுகிறாய். நீ என்ன மிரட்டுகிறாயா? சர்வாதிகாரியா? சதாம் உசேனா?.. சதாம் உசேனின் இறுதி கதை என்ன ஆனது என்பது உனக்கு தெரியுமா?.. நீ என்ன நீதிமன்ற நீதிபதியா?. நீ செய்து வரும் தவறுக்கு உனது ஆறு தலைமுறை ஜெயிலில் இருந்தாலும் போதாது.

யோக்கியனை போல பேச கூடாது. திமுகவின் ஆட்சியில் அடிக்கப்பட்ட கொள்ளைகள் எங்களுக்கு தெரியும். அண்ணாநகர் ரவி கொலை வழக்கை மீண்டும் எடுக்கவா?. அவரது குடும்பமே எப்படி இறந்தது?. திரைப்படமும் யாராலும் எடுக்க முடியவில்லை. மீறி படத்தை எடுத்தால் படங்களை திரையிட மறுப்பு தெரிவித்து வருவதுதானே நீங்கள். கழகம் செய்து பல இலாபம் பார்த்தவர்கள். 100 கோடி முதலீட்டில் படம் எடுத்தால், உங்களிடம் 30 கோடிக்கு கொடுத்திவிட்டு செல்ல வேண்டும்.

உங்களை தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவிலான கட்டிடம் காட்டினால் உடனே அதை வாங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நீர்நிலை ஆக்கிரமிப்பு ஏதும் இருந்ததா? அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட்டோமா?. நாங்கள் உழைக்கிறோம். சாப்பிடுகிறோம். ஏய்த்து பிழைப்பு நடத்தும் திமுகவினருக்கு, ஸ்டாலின் மீதே நம்பிக்கை இல்லை. திமுகவினர் மொத்தமாக வடநாட்டு வாத்தியார் பிரசாந்தை மட்டுமே நம்பியுள்ளேர்கள். ஸ்டாலினை கடைசி வரை நம்பவில்லை. நீங்கள் எப்போதும் ஆட்சியை பிடிக்க இயலாது. 

ஆட்சியை பிடிக்க இயலாமல் கட்சியை மட்டுமே ஸ்டாலின் இழக்க போகிறார். மனிதனுக்கு முதலில் நம்பிக்கை வேண்டும். பிறரை குறை சொல்வதற்கு முன்னதாக தன்னை பார்க்க வேண்டும். நாம் யோக்கியனா? என்று சிந்தித்து பேச வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஷாகித் பல்வா, அன்றைய துணை முதல்வர் ஸ்டாலினை பல முறை சந்தித்து இருக்கிறார். சி.பி.ஐ ஸ்டாலின் குறித்து விசாரணை செய்ய துவங்கியது. 

மண்ணாகிப்போன மன்மோகன்சிங் ஸ்டாலினை காப்பாற்றினார். தனது அப்பாவி தங்கையை 2 ஜி வழக்கில் சிக்கவைத்துவிட்டு, அவர் மட்டும் நன்றாக இருந்தார். 2 ஜி வழக்கில் கனிமொழி கைதாக ஸ்டாலின் முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது. யோக்கியன் வருகிறான் சொம்பை உள்ளே வை என்ற பழமொழி உண்டு. யோக்கியன் வந்தால் எதற்கு சொம்பை வீட்டில் வைக்க வேண்டும். இதனை அனைவரும் சிந்தித்தால் நலம். 

நான் தென்மாவட்டத்தின் வீரம்மிக்க மண்ணை சார்ந்தவன். உனது சலசலப்புக்கு நான் அஞ்சமாட்டேன். பனங்காட்டு நரியான என்னையே நீ மிரட்டி பார்க்கிறாய். என்னை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி விடுவாயா?. நீ எனது ஊருக்கு வா.. நீ நல்ல ஆண்மகனாக இருந்தால் இங்கு வா.. இல்லை நீ சொல்லும் இடத்திற்கு நானே வருகிறேன் " என்று பரபரப்பாக பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Rajendra Balaji Speech about DMK 5 November 2020


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal