அதிர்ச்சி கேள்வி...! ‘ஜனநாயகன்’ லீக்... இதற்கு ஆதவ் அர்ஜுனா தொடர்பு கூட இருக்கலாம்...! - காயத்ரி ரகுராம்
Shocking question Jananayakan League Adhav Arjuna may involved this Gayathri Raghuram
திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியின் திருமுருகன் பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல கருத்துகளை வெளியிட்டார்.அவர் அப்போது தெரிவித்ததாவது,"த.வெ.க. சார்ந்த ஆதவ் அர்ஜுனாவை மக்கள் நம்பிக்கையுடன் ஏற்கப் போவதில்லை.

அவர் யாருக்காக செயல்படுகிறார் என்பது பொதுமக்களுக்கு தெளிவாகவே தெரியும். “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கும் அவரே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அந்த முயற்சி வாக்குகளை ஈர்க்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கலாம்.
ஆனால் திரைப்படங்களை பார்த்து மக்கள் ஓட்டளிக்கமாட்டார்கள்; நேரில் சென்று மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே முக்கியம்.மக்களை சந்திக்காமல் இருக்கும் ஒருவரை நோக்கி திரளும் கூட்டம் வெற்றியை உறுதி செய்யாது. நடிகர் சிரஞ்சீவிக்கும் கூட்டம் திரண்டது; ஆனால் அது வாக்குகளாக மாறவில்லை என்பது அரசியல் உண்மை.
முதலில் ஆதவ் அர்ஜுனா மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்று வந்து தன்னுடைய நிலைப்பாட்டை நிரூபிக்க வேண்டும். இதுபோன்ற மலிவு அரசியல் அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.மேலும், விஜய்க்கு அரசியல் அனுபவம் குறைவு. விஜயும் உதயநிதியும் பிரசாரத்திலிருந்து விலக உடல்நிலை காரணம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
விஜயிடம் பேசத் தேவையான அரசியல் சாதனைகள் இல்லை; அவரிடம் வெளிப்படுத்தக்கூடிய அறிக்கை அட்டையும் இல்லை. இருவரும் ஒரே விதமான அரசியல் பாணியை பின்பற்றி, முதல்வர் பதவியை நோக்கி முன்னேற முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அந்த உயர்ந்த பதவியை அடைய படிப்படியாக உழைப்பும், மக்களின் நம்பிக்கையும் தேவை. இந்நிலையில், இந்த இருவரையும் தமிழக மக்கள் முதல்வராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
English Summary
Shocking question Jananayakan League Adhav Arjuna may involved this Gayathri Raghuram