சட்டசபையில் புகார் அளித்த எம்எல்ஏ.! தனியார் மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


சட்டசபையில் புகார் அளித்த எம்எல்ஏ.! தனியார் மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்.!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 28 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன், நீலகிரியில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி எப்போது முடிவடையும் என்று கேள்வி எழுப்பினார். 

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு தாமதமாகச் சிகிச்சை அளிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசியாவது:-

‘’ ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் நோக்கம். கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி பணிகள் அனைத்தும் வருகிற ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவடையும்.

அதுமட்டுமல்லாமல், கூடலூரில் உள்ள மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்கு தாமதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister m subramaniyan warning to private hospitals for govt medical insurance scheme


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->