நெல்லூருக்கு விரையும் மிக்ஜாம் புயல்.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் நேற்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

இந்தப் புயல் இன்று ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து படிப்படியாக நகரத் தொடங்கி, நெல்லூர் கடற்கரையை நெருங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நெல்லூருக்கு 30 கி.மீ. கிழக்கு - வட கிழக்கே மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புயல் சென்னையை புரட்டி போட்டு உள்ளது. இரவு முழுக்க தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளகாடாக அளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mikjam strom centered nellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->