மயிலாப்பூரில் நள்ளிரவு அதிரடி! திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 'பண வேட்டை'...! - கோடிக்கணக்கான பணம் பறிமுதல்...?
Midnight action Mylapore Money hunt at DMK candidate assistant house Crores money seized
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை அதாவது வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் நோக்கில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா. வேலுவின் நெருங்கிய உதவியாளராக செயல்பட்டு வந்த சத்தியமூர்த்தியின் வீட்டில் சந்தேகத்துக்கிடமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பறக்கும் படையினர் அதிரடியாக அந்த இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது, வீட்டின் உள்ளே மறைமுகமாக வைக்கப்பட்டிருந்த பைகளில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளாக கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் சுமார் ரூ.2 கோடி ரொக்கம் இருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணத்தை துல்லியமாக கணக்கிட அதிகாரிகள் சிறப்பு எண்ணும் இயந்திரங்களையும் பயன்படுத்தினர்.இதுமட்டுமின்றி, வாக்காளர் பட்டியல்கள், குறிப்பேடுகள், தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சி நிர்வாகிகளுக்கு பண விநியோகம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெறவுள்ள முக்கிய தருணத்தில், வேட்பாளர் தரப்பை சேர்ந்தவரின் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை பணம் சிக்கியிருப்பது மயிலாப்பூர் தொகுதியை மட்டுமின்றி, தமிழக அரசியல் வளாகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Midnight action Mylapore Money hunt at DMK candidate assistant house Crores money seized