நீர் வரத்தும் இல்ல! மழையும் இல்ல! நாளை முதல் மூடப்படும் மேட்டூர் அணை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கான நீர் திறக்கப்பட்ட நிலையில் நாளை (அக்-9) மாலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அரசு அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு சேர்க்க வேண்டிய பங்கு நீரை திறக்காததாலும், மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் சென்றதால் நீர் திறப்பு நாளை முதல் நிறுத்த நீர்வளத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தற்போது மேட்டூர் அணை தண்ணீர் இன்றி குட்டை போல காட்சி அளிக்கிறது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா அரசு குறைத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே மேட்டூர் அணை நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Dam water release will be stopped from tomorrow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->