படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்! - Seithipunal
Seithipunal


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டதால், நேற்று விநாடிக்கு 328 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் குறைந்து விநாடிக்கு 235 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. 

அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.63 அடியாக இருந்து, இன்று 96.94 அடியாக குறைந்துள்ளது. 

இதே நிலை நீடித்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam water level


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->