மேட்டூர் அணையில் தீடீரென காட்சியளிக்கும் இந்து, கிறிஸ்தவ ஆலய கோபுரம்! - Seithipunal
Seithipunal


பண்ணவாடி கிராமங்களில் இருந்த இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் தண்ணீரில் மூழ்கியதால் நீர்மட்டம் குறையும்போது கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெறிக்கிறது:

மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் பண்ணவாடி, காவேரிபுரம், கோட்டையூர் போன்ற கிராமங்கள் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளன. 

பின்னர் அணை காட்டியபோது, அந்த கிராமங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால், கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் வெளியேறி, வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அந்த கிராமங்களில் இருந்த இந்து, கிறிஸ்தவ அலையங்களும் தண்ணீரில் மூழ்கின. 

அங்கிருந்த பண்ணவாடி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலய கோபுரம் மற்றும் ஜலகண்டேசுவரர் ஆலய நந்தி சிலை போன்றவை மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது வெளியே தெரியும். 

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்துள்ளதால். சுமார் 1 அடி அளவிற்கு கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேல் காட்சி அளிக்கிறது. 

மேலும் அணையின் நீர்மட்டம் 68 அடிக்கு கீழ் குறையும் போது, ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலையும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் தெரியும். கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருந்ததால் இந்த ஆலயங்களை தண்ணீர் மட்டத்துக்கு மேல் காட்சியளிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam suddenly display gropuram


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->