மேட்டூர் அணை நிரம்பியது! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மற்றும் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள நீ தேக்க அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

இரண்டு அணைகளும் ஏற்கனவே நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைக்கு வரும் நீரினை காவேரி ஆற்றின் வாயிலாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரியில் நீர்திறப்பு அளவானது  இன்று காலை வரை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை மழை குறைந்ததையடுத்து நீர் திறக்கும் அளவானது குறைக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தற்போது 39247 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல கபினி அணையிலிருந்து தற்போது 23333 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த இரண்டு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்திற்கு 80000 கன அடி நீர் வரை நேற்று திறக்கப்பட்டு இருந்தது. தமிழக- கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுக்கு விநாடிக்கு 79000 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 76000 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நீர் வரத்து அதிகரித்து இருப்பதன் மூலம் இன்று மேட்டூர் அணியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையில் இருந்து காவிரி-டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரும், மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் 33200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  

முன்பு பெய்த மழைக்கு, மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர் வந்து கொண்டிருக்கும் போதே, மேட்டூர் அணை நிரம்பி, 120 அடி அளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணை நிரம்பும் முன்னே காவிரி-டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் மழையும் நின்றதால் கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு முற்றிலும் குறைந்து போனதால் அணை நிரம்பாது என்ற சூழல் உருவானது. 

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால், வரும் அதிகப்படியான நீரின் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 43 ஆவது முறையாகும். அணை முழு கொள்ளளவை அடைந்து விட்டதால், தற்போது திறக்கப்படும் 33200 கன அடி என்ற அளவானது அதிகரிக்கப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பாதுகாப்பும் போடப்பட்டுளள்து. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur dam reached full water level


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->