மேட்டூர் அணையை இன்று திறத்து வைக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


கடந்தாண்டு முதன் முறையாக மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதே போன்று இந்த வருடமும் மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதன் காரணமாக வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையிலிருந்து  குறுவை நெல் சாகுபடிக்காக இன்று திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மேலும் சில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று சேலம் மாநகரில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur dam open by mk Stalin today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->