நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் விவாதம் இன்றி அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி தலைவர் அறிவித்ததால் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் இன்று காலை வழக்கம் போல நகராட்சி தலைவர் மெகபூபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. 

நகர்மன்ற கூட்டம் தொடங்கியதும் தீண்டாமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் தொடங்கியவுடன் நகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். 

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettupalayam Admk municipal counsellors protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->