#சென்னை || தண்ணீர் சப்ளையில் எந்த பாதிப்பும் இல்லை.. மெட்ரோ குடிநீர் வாரியம் விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையத்தில் ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்யாமல் லாரிகளுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில் பொது மக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதில் எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும், வணிக ரீதியாக லாரி உரிமையாளர்களுக்கு ஒத்து போகாததால் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர் எனவும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஓடும் 428 லாரிகளில் 42 லாரிகள் மட்டுமே வேலைநிறுத்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro water board explained no impact on water supply


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->