5 மாவட்டத்திற்கு வருகிறது மெட்ரோ ரயில் சேவை.!! வெளியானது அசத்தல் அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி சென்னை போன்று கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ள மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு வழித்தடங்கள் அமைய உள்ளது. சேலம் மாவட்டத்தில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கும், திருச்சி மாவட்டத்தில் 38 கிலோமீட்டர் தொலைவிற்கும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை அடுத்து திருச்சி மற்றும் சேலத்தில் மெட்ரோ பணிகளில் கவனம் செலுத்த மெட்ரோ நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து மற்றும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை கர்நாடகா மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro train service is coming to 5 districts in TamilNadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->