சுவையான 'வெள்ளைப் பூசணி சட்னி' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


வித்தியாசமான சுவையில் வெள்ளை பூசணிக்காய் சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
வெள்ளை பூசணிக்காய் 
தேங்காய் 
பச்சை மிளகாய் 
புளி 
சின்ன வெங்காயம் 
பொட்டுக்கடலை 
கருவேப்பிலை 
உப்பு 
எண்ணெய் 
கடுகு 
உளுத்தம் பருப்பு 

செய்முறை: 

முதலில் வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நறுக்கிய வெள்ளைப் பூசணியை சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கி கொள்ளவும்

ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்துள்ள பூசணிக்காய் ,துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வதக்கி சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, புளி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பிறகு அரைத்த சட்னியை ஒரு பவுலின் மாற்றிவிட்டு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியம் நிறைந்த வெள்ளை பூசணிக்காய் சட்னி தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

White pumpkin chutney recipe in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->