மாடு முட்டிதால் மட்டும் முதியவர் உயிரிழக்கவில்லை! மேயர் பிரியாவின் புது விளக்கம்!! - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே மாதா கோவில் தெருவில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி காலை சுந்தரம் என்ற முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென தெருவில் சுற்றிக் கொண்டிருந்த மாடு அவரை முட்டியதில் தூக்கி வீசப்பட்டார். 

இதில் படுகாயம் அடைந்த சுந்தரம் பொதுமக்களால் மீட்டப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முதியவர் சுந்தரம் உயிரிழந்தது குறித்து விளக்கம் அளித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா "மாடு முட்டி சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் உயிரிழந்ததற்கு அது மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது. அவருக்கு ஏற்கனவே நிறைய உடல் நல பாதிப்புகள் இருந்துள்ளது அதன் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம்" என புது விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor Priya explained old man did not died only cow hitting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->