அதிகரிக்கும் முட்டை கொள்முதல் விலை.. மேலும் உயர வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஆடி மாதம் முடிந்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி போன்ற காரணங்களால் முட்டையின் நுகர்வு மிகவும் குறைவாக இருந்து வந்தது. இத்தகைய சூழலில், விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்த காரணத்தால் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் முட்டை நுகர்வு அதிகரித்து இருக்கிறது. இதனால், முட்டையின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. 

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. அப்பொழுது முட்டையின் கொள்முதல் விலையை 50 காசுகள் அதிகரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளில் இருப்து உயர்த்தப்பட்டு, 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து, பண்ணையாளர்கள் தெரிவிக்கையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆடி பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் முட்டை விற்பனை குறைவாக நடந்து வந்தது. தற்போது, அனைத்தும் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் சில்லறை விற்பனை அதிகரித்து இருக்கிறது. 

வட மாநிலங்களில் முட்டை விற்பனை அதிகரித்து இருக்கும் காரணத்தால் விலை வேகமாக உயர்ந்துள்ளது. தமிழக மற்றும் கேரளா மாநிலங்களுக்கு முட்டை தேவை அதிகமாக உள்ளதால் மீண்டும் விலை உயரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May Egg Price Hike In india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->