திருமண தகவல் இணையதள மோசடி - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த விதிகள் வகுக்க வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமண தகவல் இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களை ஏமாற்றப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் வேதனை தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்ஜாமின் கோரிய பிரசன்னா என்பர்வது மனுவை விசாரணை செய்த நீதிபதி அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருமண தகவல் இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி அவர்கள், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு விதியை வகுக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால், இது போன்ற மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மோசடி வழக்கில் முன்ஜாமின் கோரிய பிரசன்னாவின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Matrimoney scam issue Chennai HC Order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->