Mannargudi Sendalankara Jeiyar criticizes the 'Victory Journey' (Vetrip Payana Thittam) plan, calling it useless
Mannargudi Sendalankara Jeiyar criticizes the Vetrip Payana Thittam plan calling it useless
பெரியார் கொள்கையைப் பின்பற்றும் இந்த அரசாங்கம் பைத்தியக்காரத்தனமானது. வெற்றிப் பயணத் திட்டம், பிரயோஜனம் இல்லாதது என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார். இன்று திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், அவர் கூறியதாவது;
இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு பிரயோஜனமாக இருக்கு என கூற முடியாது என்றும், மிக மோசமாக இருக்கு. இந்த அரசு, ஈ.வெ.ஆரைக் கும்பிட்டுவிட்டு ஆட்சி நடத்தும் அரசாக உள்ளது. இது ஒரு பைத்தியக்காரத்தனமானது என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், கோயிலுக்குள் செல்போன் உபயோகிக்கக் கூடாது, படம் எடுக்கக் கூடாது என்பதெல்லாம் நல்ல திட்டம்தான். ஆனால், அதனைப் பயன்படுத்தி பக்தர்களைத் தொல்லை செய்யக்கூடாது என்றும், ஒரு சில கட்டணங்களை இந்த அரசு ரத்து செய்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை கோயில்களில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அரசு கொண்டு வந்துள்ள வெற்றிப் பயணத் திட்டம், பிரயோஜனம் இல்லாதது என்று கூறியதோடு, கடந்த திமுக அரசு பேருந்துகளுக்கு லிப்ஸ்டிக் போடப்பட்டு இலவச பேருந்து திட்டத்தை கொண்டு வந்த நிலையில், இந்த அரசு பேருந்துகளின் நிறத்தை மாற்றி, வெற்றிப் பயணம் என சொல்லுகிறது. இதனால் பயன் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், என்னைப் போன்ற சன்னியாசிகளுக்கு எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் ஒன்றுதான். நாடும், தர்மமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியாவிலும், வேறொரு வெளிநாட்டிலும் குடியுரிமை உள்ளது. அதற்காக அவர் இரண்டு நாட்டிலும் வாக்குரிமையை வைத்துக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுபோலத்தான் வேலைக்காக வெளிமாநிலத்துக்குச் சென்றவர்கள் அங்குள்ள அரசியல்வாதிகளின் தூண்டுதலில் படிவம் 06-ஐ பயன்படுத்தி வாக்காளராகச் சேர்கின்றனர். அவ்வாறு சேர்க்கப்படும்போது அவரது சொந்த ஊரிலும், வேலை பார்க்கச் சென்ற இடத்திலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுவிடுகிறார். அதைத்தான் நீக்கி உள்ளனர். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', ஒரே ஒரு வாக்கு' என்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.
English Summary
Mannargudi Sendalankara Jeiyar criticizes the Vetrip Payana Thittam plan calling it useless