தருமபுரியில் காணாமல் போன மாம்பழம்! வாக்குச்சாவடிக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்!  - Seithipunal
Seithipunal


இன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஆனது முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்ற தேர்தல் சில இடங்களில் சலசலப்பை உண்டாக்கியது. 

இன்று நடைபெற்ற பரபரப்பான சம்பவங்களில் தருமபுரி மாவட்டத்தில் ஒன்று நடைபெற்றுள்ளது, அந்த மாவட்டத்தில் மிட்டாரெட்டிஅள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வாக்குசீட்டில் அங்கு போட்டியிட்ட பாமகவின் மாம்பழம் சின்னத்தினை காணவில்லை. மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து  வாக்குச்சாவடியில் எதிர்ப்பு உருவாக உடனடியாக நிலைமையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடிக்கு விரைந்தார். பின்னர் அங்கு மாம்பழம் சின்னம் இல்லாமல் அளிக்கப்பட்ட 7 பேரிடம் மாற்று வாக்குச்சீட்டுகள் அளிக்கப்பட்டு மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mango symbol missed in vote paper at Dharmapuri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->