#திருப்பூர் || ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபராகவும், பைனான்ஸியராகவும் இருந்து வந்தார். இவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றதால் பாலசுப்பிரமணி தனியாக இருந்துள்ளார்.

நள்ளிரவு வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அவரை பாலசுப்பிரமணியை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Murdered in Thiruppur


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal