பண மோகத்தில் தாயை கொன்ற மகன் - சென்னையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பண மோகத்தில் தாயை கொன்ற மகன் - சென்னையில் பரபரப்பு.!

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பேரம்பாள் தெருவைச் சேர்ந்தவர் பார்வதி. இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதனால் தன்னுடைய சொத்துக்களை இரண்டு மகன்களுக்கும் பிரித்து தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பார்வதியின் இரண்டாவது மகனான அருள் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது தாயிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு பார்வதி தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். 

இதனால், ஆத்திரமடைந்த அருள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வதியின் தலையில் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டார். இதில் பார்வதி வலித் தாங்கமுடியாமல் கதறி அழுதுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கத்தியால் வெட்டிய அருளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill mother in chennai old vannara pettai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->