குரங்கை வைத்து டிக் டாக் வீடியோ.. வீட்டிற்கே சென்று தூக்கிய வனத்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் காளிகாவுண்டான்கொட்டாய் கிராம பகுதியில் உள்ள இளைஞர்கள், குரங்குகளை பிடித்து வைத்து இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் குரங்குகளை பிடித்து டிக் டாக் வீடியோ செய்வதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இதே பகுதியை சார்ந்த ராஜா என்பவரின் மகன் கவிபாலா மற்றும் தங்கராஜின் மகன் பிரகாஷ் ஆகியோர் குரங்குகளை வைத்து டிக் டாக் செய்தது தெரியவந்துள்ளது. 

இதன்பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், இருவரும் குரங்குகளை வைத்து டிக் டாக் வீடியோ செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Arrest and pay penalty make video tic tok with Monkey


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->