சர்ச்சைக்குரிய நிர்மலா தேவி வழக்கில் 26 ஆம் தேதி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவியின் மீதான வழக்கில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த நிர்மலா தவி வழக்கை பெண் டி.ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின் போது நிர்மலா தேவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் மீதான குற்றங்கள் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாகா கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அப்போது இந்த வழக்கை விசாகா கமிஷன் தாமாக முன் வந்து விசாரிக்க முடியாது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் புகார் அளித்துள்ளார்களா என விளக்கம் அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC verdict on April 26 in nirmala devi case


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->