வீதிக்கு ஒரு டாஸ்மாக் - நான் தான் இளைஞர்களை கெடுக்கிறேனா - அதிரவைத்த டிடிஎஃப் வாசன்! 
                                    
                                    
                                   Madurai TTF vasan Court Tasmac
 
                                 
                               
                                
                                      
                                            கடந்த 15 ஆம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை கவனக் குறைவாக, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே டிடிஎஃப் வாசன் ஒட்டியதாக  மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, நேற்று இரவு அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே வேகமாக வாகனத்தை ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், விதிகளை மீறியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு செயலை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து, மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது, எனக்கு நீதி வேண்டும். சட்டம் அனைவருக்கு பொதுவானதுதான், என்னோடு வாருங்கள் எத்தனை பேர் ஹெல்மெட் போடாமல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என்று காட்டுகிறேன் என்று டிடிஎஃப் வாசன் குரல் எழுப்பினர்.
மேலும், நான் செல்போனை காதில் வைத்து பேசவில்லை. ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசினேன்.  ஒரு 23 வயது இளைஞர் வளரக்கூடாதா? எல்லோரும் என்னை பார்த்து தான் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு அதனால் யாரும் கெட்டுப்போகவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

நான் யாரோட உயிருக்கு நான் பங்கம் விளைவித்தேன். வாடா மாநிலத்தில் இருவர் மீது கார் ஏற்றி கொலை செய்த சிறுவனுக்கு ஜாமீன். எனக்கு பின்புலம் இல்லாததால் 308 கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Madurai TTF vasan Court Tasmac