அந்த மூன்று இளைஞர்கள்... மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்ட காவல் துறையினர் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக 3 இளைஞர்களின் மீது புகார் எழுந்துள்ளது. 

இது குறித்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த நிலையில், இந்த குற்றம் குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த அநீதியை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், இதன்படி காவல் துணை ஆணையருக்கு அலைபேசி எண்ணாக 9498129498 என்ற என்னும், காவல் ஆய்வாளர் ஹேம மாலா 8300017920, காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாஸன் 9790599332 ஆகியோரின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கும் பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும், தங்களுக்கு இவர்களால் அநீதி ஏதும் நடந்திருப்பின் காவல் துறையினருக்கு கட்டாயம் தொடர்பு கொண்டு விஷயத்தை வெளிப்படையாக கூறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai police release statement about 3 youngster sexual torture child girls


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->