மதுரை திமுக எம்.எல்.ஏவின் அடாவடி.. பெண்ணை செருப்பால் அடிக்க முயன்ற கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தை சார்ந்தவர் சங்கரபாண்டியன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வருகிறார். மதுரை மாவட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி. இவர் திமுக கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவர். 

இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினரான மூர்த்தி மற்றும் அவரது ஆதரவுடன் திமுக ஒன்றிய குழு தலைவர் ரூ.14 இலட்சம் கையாடல் செய்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார் வழங்கியுள்ளனர்.

இந்த விஷயத்தை வெளிஉலகிற்கு சங்கரபாண்டி தெரியப்படுத்திய நிலையில், இந்த விஷயம் எப்படியோ எம்.எல்.ஏ மூர்த்திக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த எம்.எல்.ஏ மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் சங்கரபாண்டியின் இல்லத்திற்கு சென்று பிரச்சனை செய்து, சங்கரபாண்டியின் மனைவியை செருப்பால் அடிக்க முயற்சித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai MLA Moorthi Violent BJP Party Member House


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->