மதுரை : பேருந்து நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்! அடுத்து நடந்த பெரும் சோகம்!  - Seithipunal
Seithipunal


மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்ததும், அந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் ஓய்வறையில் படுத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவம் ஆகி, பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான பிரவீனா (வயது 37) என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓய்வறையில் படுத்திருந்த பிரவீனா, எழுந்த போது திடீரென வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸை வரவழைக்க, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மேலும் தாய் பிறவினவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai mattuthavani Bus Stand Pregnant lady


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->