மதுரை சித்திரைத் திருவிழா! நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி.! - Seithipunal
Seithipunal


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் நுழைவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வரும் 11ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைசார் பழனிவேல் தியாகராஜன், விழா பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் வி.ஐ.பி. கள் உட்பட யாராக இருந்தாலும் நுழைவுச் சீட்டு உள்ளவர்களை மட்டுமே முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai kallazhagar festival


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->