தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல், வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்?.. மதுரை நீதிமன்றம் காரசார கேள்வி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசு பணிகளில் உள்ள நபர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், குரூப் 1 போன்ற தமிழகத்தில் நடைபெறும் தேர்வுகளில் பணிநியமன விவகாரத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இதனைப்போன்று தேர்வுகளை எழுதி பணியாற்ற வரும் நபர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிவதில்லை என்றும், அலுவலகத்திற்கு வரும் தமிழ் பேச தெரிந்த மக்களுக்கு அவர்கள் எப்படி விளக்கம் அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. மேலும், அஞ்சல் வழியில் தமிழ் படிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், தமிழ் மொழிக்காக வழங்கப்படும் சலுகையை தவறாக பயன்படுத்தி வருவதாக மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், " தமிழகத்தில் தமிழ் மொழி இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் மொழி இருக்கும். தமிழ் வழியில் படித்தவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழ் வழியில் படித்தவர்களை அடிப்படையாக கொண்டு, இடஒதுக்கீடு முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வுக்கு இடைக்கால தடையை ஏன் விதிக்க கூடாது?. தமிழகத்தி தமிழ் மொழியில் படித்தவர்கள் அருகி வருகிறார்கள் " என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Raise question about Tamil Language govt Officers Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->