நேர்மையான அதிகாரிகள் கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது - மதுரை கிளை வேதனை.! - Seithipunal
Seithipunal


நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள், சாதாரண மனிதருக்கான பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்வது அவசியம் என மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் அருகே, கடந்த ஜூலை 31 ஆம் தேதி கிராம உதவியாளர் பெரியசாமி என்பவரை சக்திவேல் என்பவர் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சக்திவேல் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சக்திவேல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். 

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், "நேர்மையாக இருக்கும் அதிகாரிகள் தங்களின் கடமையை செய்யவே போராட வேண்டியுள்ளது. அதிகாரிகளுக்கு எதிரான குற்ற நிகவுகள் முறையாக கையாளப்படாத பட்சத்தில், அதிகாரிகள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்?.

நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள், சாதாரண மனிதருக்கான பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்வது அவசியம்" என்று தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Judges Says about Govt Officers Bribery Issue


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal