#Breaking: " இரண்டாம் குத்து " போன்ற பல குட்டிசாத்தான்களுக்கு முரட்டு குத்தாக குத்தும் மதுரை நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


தவறான உறவுகள் குறித்த தகவலை தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் அதிகளவு ஊக்குவித்து வருவதாகவும், தொலைக்காட்சிகளுக்கு உள்ள தொடர்களுக்கென தணிக்கை குழு கிடையாதா? என்ற கேள்வியையும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. 

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்பட இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாரின் அடுத்த திரைப்படமான இரண்டாம் குத்து திரைப்படம் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டரில் ஆபாச முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. 

இதனைக்கண்ட பலரும் பெரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மதுரையை சார்ந்தவர் மனுதாக்கல் செய்தார். மேலும், இரண்டாம் குத்து திரைப்படத்தின் விளம்பரங்களை இணையதளத்தில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும் என்றும், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு முன்னிலையில் வந்த நிலையில், " இன்றுள்ள தொலைக்காட்சித்தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தவறான உறவுகள் குறித்த தகவலை ஊக்குவிப்பது போல வெளியாகி வருகிறது. 

இதில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களும் அடங்கும். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களுக்கு என தணிக்கை குழு கிடையாதா?. இவ்வாறான செயல்களால் பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அன்றைய திரைப்படங்கள் குடும்பத்தின் அன்பிற்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளித்தது.

ஆனால் இன்று.. பல திரைப்படங்கள் வணிக நோக்கத்துடன் ஆபாசமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிகரித்து வருகிறது. இந்த விஷயம் குறித்து அப்படத்தில் நடித்தவர்கள் மற்றும் இயக்குனர் உட்பட அனைவருக்கும் நோட்டிஸ் வழங்க வேண்டும். மேலும், விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடுவதாக " நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பெண்களுக்கு எதிரான கருத்துக்களை அவர்களுக்கு நல்லது போல சித்தரித்து பெண்ணுரிமை என்ற பெயரில் பாலியல் ரீதியான நடவடிக்கையில் பல அவதூறுகளை அப்பட்டமாக பரப்பி எதிர்கால தலைமுறையை இது போன்ற திரைப்படங்கள் மோசமாக சீரழித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Court Angry about Irandam Kuttu Movie gives Sampan for Actor and Director


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->