மதுரை | வழிப்பறியில் பாஜக நிர்வாகி! தட்டி தூக்கிய போலீஸார்!  - Seithipunal
Seithipunal


மதுரை மாநகரில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற பாஜக நிர்வாகியை போலீஸார் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

மதுரை : பிபி.குளம் முத்துராமலிங்கத்தேவர் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த், மதுரை மாநகர பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மதுரை உலக தமிழ்ச்சங்கம் பகுதியில் கத்தியுடன் நின்றதாக தல்லாகுளம் போலீஸார் ஸ்ரீகாந்தை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் கிடுக்குப்புடி விசாரணையில், அந்த வழியாக செல்பவர்களிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் நோக்கில் ஸ்ரீகாந்த் நின்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து வாள் ஒன்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீகாந்த்தை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறி வழங்கி ஸ்ரீ காந்த  கைதானது மதுரை பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai BJP Sri Kanth Arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->