மாஜி அமைச்சர் "ஜெயக்குமார் வழக்கு"... நீதிபதிகள் சரமாரி கேள்வி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த ஆண்டு அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் அவர் அணிந்திருந்த உடைகளோடு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். 

காவல்துறையினர் அத்துமீறி நள்ளிரவில் தன்னை கைது செய்யும் போது மனித உரிமை மீறப்பட்டதாக அவர் மாலையில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். 

ஆனால் அந்த புகாரின் மீது தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் முடித்து வைக்கப்பட்டது" என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc questioned humans rights in jayakumar case


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->