வழக்காடு மொழியாக தமிழ் .!! ஆதங்கப்படுவதில் பலன் இல்லை - உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து..!! - Seithipunal
Seithipunal


மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே டிசம்பர் 20ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த கோரிக்கை  நிராகரிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில்தெரிவித்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற வேண்டுமென்ற மனுதாரரின் எண்ணத்தை பாராட்டுவதாகவும், ஆனால் அதற்கு இது போன்ற உண்ணாவிரதம் இருப்பது சரியான செயல் இல்லை என தெரிவித்தார்.

மேலும் சட்ட மொழிகளுக்கு ஏற்ப தமிழ் மொழியில் சரியான சொற்களை கண்டறிய வேண்டுமென தெரிவித்த நீதிபதி, ஆங்கிலத்தில் உள்ள சட்ட புத்தகங்களை எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மொழிப்பெயர்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை, நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க நிதி ஒதுக்குவது மட்டும் போதாது, அடிமட்ட அளவில் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நீதிபதி கருத்து தெரிவித்த்துள்ளார்.

அப்போது போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையின் நிலைப்பாடு என்ன என நீதிபதி கேள்வி எழுப்ப சாகும்வரை உண்ணாவிரதம் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை பதில் அளித்தது.எந்த மாதிரியான போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madrashc comments no point in delaying making Tamil hc official language


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->