இனி மீறினால் சட்டப்படி நடவடிக்கை..!! என்எல்சி விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலி அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்த பயிர்களை அழித்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. என்எல்சி நிறுவனத்தின் இந்த செயலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது என்எல்சி நிறுவனத்திற்காக கையகபடுத்தபட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை மீண்டும் என்.எல்.சியிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார். ஏற்கனவே பயிர் அளித்ததற்காக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தனது தீர்ப்பில் என்.எல்.சி விவகாரத்தில் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்றும், என்எல்சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014ம் ஆண்டுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் எனவும், விவசாயிகள் இதற்குப் பிறகு புதிதாக பயிரிடக் கூடாது எனவும், இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court has given sensational verdict in the NLC issue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->