மதுரை | முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா! - Seithipunal
Seithipunal


சோழவந்தான் அருகே 487 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாயில் இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மீன் பிடித்தனர்:

மதுரை: சோழவந்தான் அருகே உள்ள செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் அருகே 487 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாய் மூலம் இந்தப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. 

அந்த பகுதியில் உள்ள கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய 
பின்பு இந்த கண்மாயில் மீன்களை விடுவது வழக்கமாக இருக்கிறது.  

இந்த முதலைக்குளம் கண்மாயில் ஆண்டு தோறும் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு திருவிழா இன்று நடைபெற்றது.  

பொதுமக்கள் நேற்று இரவு முதல் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் முதலைக்குளம் கண்மாயை முற்றுகையிட்டனர். 

இன்று காலை 5 மணி அளவில் ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி, பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 3 முறை வெடிகள் வெடிக்கப்பட்டு திருவிழா தொடங்கப்பட்டது. 

இதில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் முதலைக்குளம் கண்மாயில் இறங்கி மீன்பிடிக்க தொடங்கி பல்வேறு ரக மீன்களை கிலோக்கணக்கில் பிடித்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhurai 487 yekkar caught fishing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->