மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை...! - 5 கோடி ரூபாய் மோசடி வழக்கில் விருதுநகர் நிதி நிறுவன அதிபர் அதிரடி கைது...!
Luxurious life with people money Virudhunagar financial institution president arrested 5 crore fraud case
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையை சிதறடித்த பல கோடி நிதி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரூ.5 கோடி மோசடி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் நிதி நிறுவன இயக்குநர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம். ரெட்டியபட்டி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம், அதிக வட்டி வருமானம் மற்றும் முதலீட்டுக்கு கூடுதலாக தங்க நாணயம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஏராளமான பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் திட்டமிட்டபடி வட்டி வழங்கப்பட்டதால் பலரும் நம்பிக்கையுடன் முதலீடு செய்தனர். ஆனால் காலப்போக்கில் வட்டி தொகையும், முதலீட்டு பணமும் திரும்ப வழங்கப்படாததால் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் பல குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பணத்தை இழந்த ராஜசேகரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிதி மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிதி நிறுவன இயக்குநர் காளீஸ்வரன் (35), வழக்குப்பதிவுக்குப் பிறகு நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
அவரை பிடிக்க மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட காவலர்கள் காளீஸ்வரனை அதிரடியாக கைது செய்தனர்.
தற்போது அவரிடம் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள், வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் அதன் பரிவர்த்தனைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பொதுமக்களின் உழைப்புப் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Luxurious life with people money Virudhunagar financial institution president arrested 5 crore fraud case