தூத்துக்குடியில் 'மது' வேட்டை...! 190 பாட்டில்களுடன் சிக்கிய ஆசாமிகள்...! - பைக்குகளும் பறிமுதல்!
Liquor hunt Thoothukudi Criminals caught 190 bottles Bikes also seized
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதூர்-சென்னம்பட்டி சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அமீர்தராஜ் (42) என்பவர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனைக்காக கடத்தியது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்து, அவரிடமிருந்து 90 மதுபாட்டில்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் துரைச்சாமி மற்றும் காவலர்கள் மேற்கொண்ட தனிப்பட்ட கண்காணிப்பில், புதூர்-காடல்குடி சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த முருகன் (25) என்பவரும் சிக்கியுள்ளார்.
அவரிடமிருந்து 95 மதுபாட்டில்களும் இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இரு சம்பவங்களிலும் மொத்தமாக 190 மதுபாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத விற்பனை வலையமைப்பின் பின்னணியில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் உள்ளனர் என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Liquor hunt Thoothukudi Criminals caught 190 bottles Bikes also seized