கெட்டுப்போன சிக்கன்! கே.எஃப்.சி நிறுவனத்திற்கு ஆப்பு! அதிகாரிகள் அதிரடி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த பிரபல கே.எஃப்.சி நிறுவனத்தின் உரிமம் இடைகால ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மறு அறிவிப்பு உத்தரவு வரும்வரை கடையை திறக்க கூடாது என உத்தரவிடபட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்தனர்.

அது மட்டுமில்லாமல் 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் சிந்தடிக், தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய எண்ணெய் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

அன்றாடம் 1000க்கும் மேற்பட்டோர் வந்து உணவருந்தும் கேஎஃப்சி நிறுவனத்தில் பழைய சிக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த கேஎஃப்சி உணவகத்தின் உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சின்னதுரை ஜவுளி கடை வளாகம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானிபூரி கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

license of the famous KFC company operating in Tuticorin has been temporarily cancelled


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->