உதயநிதிக்கு காத்திருக்கும் 'டிடி தமிழ்' கேள்வி - எல். முருகன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிடி பொதிகை தொலைக்காட்சியின் பெயரை 'டிடி தமிழ்' என்று மாற்றப்பட உள்ளதாகவும், சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதாகவும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

இன்று சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன் தெரிவிக்கையில், "மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். பல வருடங்களுக்கு பின் அதனை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளை டிடி பொதிகையில் ஒளிபரப்ப உள்ளோம்.

வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் முதல் டிடி பொதிகை என்பதை 'டிடி தமிழ்' என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தனியார் செய்தி நிறுவனங்களுக்கு இணையாக 'டிடி தமிழ்' இனி செயல்படும். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரை கேள்வி கேட்க எண்களின் 'டிடி தமிழ்' செய்தியாளர்கள் தயாராகிவிட்டனர். 

விரைவில் நீட் தேர்வால் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை அமைச்சர் இளவரசரிடம் (உதயநிதியிடம்) கேள்வி கேட்பார்கள். அதனை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

L Murugan say Doordarshan DD Podhigai name change to DD Tamil


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->