குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா..., வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான குற்றால அருவியில், தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குற்றால அருவி நீரில் குளித்து செல்கின்றனர்.

தற்போது பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகின்றனர்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான தென்காசி, குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது அருவியில் நீர் குறைந்துள்ள போதிலும், சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று காத்திருந்து அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர். 

கடந்த ஆறு தினங்களாக மழை இல்லாத காரணத்தினால் குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. பொதுவாக குற்றால அருவியின் சீசன் என்பது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் தான். இந்த மூன்று மாதங்களில் தான் குற்றால அருவியில் குளிப்பதற்கு சாதகமான சூழல் அமையும்.

ஆனால் தற்போது சீசன் இல்லாத போதிலும், கோடைக்கால விடுமுறையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் குற்றால அருவியில் குளித்து வருகின்றனர்.

தற்போது குற்றால அருவியில் போதிய அளவுக்கு நீர்வரத்து குறைவாக உள்ளதால், அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் உள்ள அழிவுகளுக்கும்m தனியாருக்கு சொந்தமான அருவிகளும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kutralam water fall may 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->