குன்றத்தூர் அபிராமியின் இறுதி மூச்சு இருக்குவரை சிறை! கள்ளக்காதல், குழந்தைகள் கொலை வழக்கின் தீர்ப்பு!
kundrathur abirami case judgement details
2018ஆம் ஆண்டு குன்றத்தூர் இரு குழந்தைகள் கொலை வழக்கில், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தாய் அபிராமிக்கும், உடந்தையான மீனாட்சி சுந்தரத்துக்கும் கடும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விஜய், சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். மனைவி அபிராமி, மகன்கள் அஜய் (7), காருனிகா (4) ஆகியோருடன் குன்றத்தூரில் வாழ்ந்து வந்தார்.
அந்த நேரத்தில், பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரத்துடன் அபிராமிக்கு நெருக்கம் ஏற்பட்டது.
கள்ளகாதலுனுக்காக அபிராமி, 2018ஆம் ஆண்டு தன் குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், காதலன் மீனாட்சி சுந்தரத்துடன் கேரளா தப்பிச் செல்ல முயன்ற போது, இருவரும் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவுக்கு வந்த நிலையில், நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், குற்றத்தில் உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
kundrathur abirami case judgement details