கும்மிடிப்பூண்டி சம்பவம்! சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!
kummudipoondi incident police crime
கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் பள்ளி மாணவியிடம் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திது.
கடந்த 12ம் தேதி பள்ளி முடித்து வீட்டுக்குச் செல்லும் வழியில், மர்ம நபர் ஒருவன் சிறுமியை பின் தொடர்ந்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமி தனது பாட்டியிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக சிறுமி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது உடல்நிலை சீரானதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளியை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், நெல்லூர் அருகே சந்தேகத்தின் பேரில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. தலைமறைவாக உள்ள முதன்மை குற்றவாளியின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
kummudipoondi incident police crime