தடையை மீறி பழனிச்சாமியை சந்தித்த முக்கிய நபர்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது. ஆனால் போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி அதிமுக எம்எல்ஏ.,க்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, செங்கோட்டையன், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ.,க்களை போலீசார் கைது எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 

பழனிச்சாமிக்கு ஆதரவாக வரும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் தற்போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் போலீசாலையும் மீறி முதல் ஆளாக எடப்பாடி பழனிச்சாமியை ராஜரத்தினம் மைதானத்திற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க பல்வேறு கட்சி தலைவர்கள் அவரை சந்திக்க முற்படும்போது போலீசாரால் தடுக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnasamy met the arrested AIADMK Interim General Secretary Palanisamy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->