"உன் சிசிடிவியால், என் வருமானமே போச்சு." திருட்டு கும்பலால்.. உரிமையாளருக்கு நேர்ந்த கதி.!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே சென்னப்ப நாயக்கனூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவரது வீடு அமைந்துள்ளது. இந்த ஈஸ்வரன் கோயம்புத்தூர் பகுதியில் ஒரு காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த வீடு ஊருக்கு ஒதுக்கு புறமாக தனியாக இருக்கிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ஈஸ்வரன் அவரது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வைத்துள்ளார். இதன் காரணமாக அப்பகுதியில் நடக்கின்ற குற்றங்கள் திருட்டுக்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த சிசிடிவியில் பதிவான நிலையில், போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டறிய ஏதுவாக இருந்தது. 

இதனால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஈஸ்வரன் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இத்தகைய சூழலில், பக்கத்து தெருவில் வசித்து வந்த சந்தோஷ் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து வந்து ஈஸ்வரன் குடும்பத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில் ஈஸ்வரன் குடும்பத்தில் இருந்த ஆட்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஈஸ்வரன் வீட்டை அடித்து நொறுக்கியதில் அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. தாங்கள் போலீசிடம் சிக்க காரணமாக இருந்த சிசிடிவியையும் அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து போலீசில் ஈஸ்வரன் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்ட இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவாக இருக்கும் ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishnagiri theft attack who fix cctv on his house


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->