உண்மையை மறைக்க முயற்சிக்கலாம், ஆனால் மறைக்க முடியாது.. மனைவியை கொலை செய்த வழக்கில் காவல் அதிகாரி கைது.! - Seithipunal
Seithipunal


மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக உதவி ஆய்வாளர் நாடகமாடிய சம்பவம் நடந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசாரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்ணகிரி டேம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் ராயக்கோட்டை சாலையில் இருக்கும் காவல்துறை குடியிருப்பில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி மனைவி ராஜலட்சுமி வீட்டில் உறங்கிய சமயத்தில் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். மேலும், மனைவியின் உடலை அடக்கம் செய்ய வேகவேகமாக ஏற்பாடுகள் செய்த நிலையில், மனைவியின் நெற்றியில் காசு வைப்பதற்கு பதிலாக இரண்டு கண்களிலும் ஒத்த ரூபாய் நாணயங்களை வைத்துள்ளார். 

பின்னர், ராஜலட்சுமியின் உடலை குளிக்க வைப்பதற்காக வெளியே எடுத்த சமயத்தில், அவரின் கழுத்தில் இறுக்கப்பட்டது போல இரத்த காயம் இருந்துள்ளது. இதனையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் ராஜலட்சுமி கழுத்து பகுதியில் காயம் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. 

இதனால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷிடம் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷை கைது செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Special Sub Inspector Ramesh Murder his wife Rajalatsumi 2 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->