அமைதியாக நின்ற காளையை ஆக்ரோஷப்படுத்தி கொலை செய்த கஞ்சா போதை கொடூரன்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாம்பாரைப்பட்டியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சக்தி. இவருக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு காளை பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை தட்டி சென்ற நிலையில், வீட்டருகே இருக்கும் கருவேல மரம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தது. 

மேலும், காளையின் வாய் பகுதியில் இரத்தம் வடிந்து, காளையின் கொம்பு உடைந்து இருந்த நிலையில், காளை ஆவேசமடைந்த மரத்தில் மோதிக்கொண்டு உயிரிழந்து இருக்கலாம் என்று எண்ணி முறைப்படி இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, சக்தி குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மரத்தில் கயிற்றால் கட்டப்பட்டு இருந்த காளையை கஞ்சா போதையில் லோகேஷ் என்பவன் துன்புறுத்தியது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சியில், கஞ்சா போதையில் இருந்த லோகேஷ், அமைதியாக இருந்த காளை சீண்டி வந்த நிலையில், காளை ஆவேசப்பட்டு  திமிறியுள்ளது. 

இதில் குறுக்கே இருந்த கருவேல மரத்தில் பலமுறை மோதிக்கொண்டதில், காளையின் கொம்பு சேதமடைந்து, வாய் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சமயத்திற்கு மேல் தலையில் பலத்த காயம் அடைந்த காளை, மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்து துடிதுடித்து பரிதாபமாக பலியாகியுள்ளது. இந்த காட்சிகளை லோகேசுடன் போதையேற்றிய இளைஞன் பதிவு செய்தது தெரியவந்துள்ளது. 

காளையை கொலை செய்துவிட்டு வந்த கொடூரன், தன்னுடன் போதை ஏற்றிய இளைஞனிடம் தகராறு செய்யவே, இதில் ஏற்பட்ட பிரச்சனையில் வீடியோ வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Jallikattu Kaalai murder by kanja culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->