என்னய்யா கன்றாவி இது..? கொடூரமாகும் கோயம்பேடு பேருந்து நிலையம்..!
koyambedu bus terminal facilitates
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேலை தேடி வருபவர்களுக்கும், ஏதோ சில காரணங்களுக்காக தமிழகத்தின் தலைநகரை நோக்கி வந்து போவோருக்கும் மறக்க முடியாத அனுவங்களில் ஒன்றாக இருந்திருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம். தினம் தினம் பல லட்சம் மக்கள் கூட்டத்தையும், பல்லாயிரக்கணக்கான பேருந்துகளை கையாளும் திறன் படைத்ததாக விளங்கி வருகிறது.
சென்னை புறநகர் பேருந்து நிலையம் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையம் என்றும் அழைக்கப்படும் இது ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.
103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது. ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.
ஒரே நேரத்தில் 2000 பேருந்துகளையும் 200,000 பயணிகளையும் மேலாளும் திறனுடையது. இங்கு தற்போது நாளொன்றுக்கு 3,000 பேருந்துகளும் 250,000 பயணிகளும் கையாளப்படுகின்றனர் .
24 மணி நேரமும் இயங்கும் பாதுகாப்பு வீரர்கள், இலவசமாக தூய குடிநீர், 24 மணி நேர இலவச முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்கு சக்கர இருக்கைகளும் வழங்கப்படுகின்றன.
இங்கு ஒருநாளைக்கு 500,000 பேருக்கும் மேலாக வந்துபோவதாகவும் 4,800 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மதிப்பிட்டுள்ளது.
இத்தனை வசதிகள் இருந்தும் முறையான பராமரிப்பின்மை காரணமாக இன்றைக்கு அகோரமாக காட்சியளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. நெடு தூரம் பயணித்து வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கூட வழியில்லாமல் திணறி வருகின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிவறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பல கழிவறைகளில் மது பாட்டில்களும், ஆணுறைகளும் சிதறி கிடக்கின்றன.
முக்கால்வாசி கழிவறைகளில் தாழ்பாள் கூட இல்லை . குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரும் பெற்றோர்கள் முகத்தை சுளித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
பேருந்து நிலைய வளாகத்தை சுத்தப்படுத்துவதில் காட்டப்படும் அக்கறை, மற்ற இடங்களில் பிரதிபலிப்பதில்லை. சிலர் ஒரு நாள் தானே வந்து போகிறோம் என்று சகித்துக்கொண்டு சென்று விடுகின்றனர்.
தினமும் வந்து போகும் மக்கள் இது தான் விதி என்று நினைத்து மனம் வெதும்பி வருகின்றனர். இதற்கு அரசு தரப்பில் இருந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
koyambedu bus terminal facilitates