#தமிழகம் || 3 பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து.! கோஸ்ட்டி மோதல்., ஒரு மாணவன் கவலைக்கிடம்.!  - Seithipunal
Seithipunal


கோவை அருகே பள்ளி மாணவர்கள் சண்டையில், 3 பள்ளி மாணவர்களுக்கு கத்திகுத்து நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், ஆலாந்துறையில்ஒரு அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது, கொரோன ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அந்த பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, பள்ளியின் அருகே தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு பிரிவை இந்த பள்ளி மாணவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் ஒருவனும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். அப்போது, அந்த முன்னாள் மாணவன் தான் எடுத்து வந்த கத்தியைக் கொண்டு எதிர் தரப்பில் இருந்த மூன்று பள்ளி மாணவர்களை, சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து மாணவர்களின் அலறல் சத்தம் போடவே, படுகாயம் அடைந்த 3 மாணவர்களையும் பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு மாணவருக்கு மட்டும் தலை மற்றும் கழுத்து, நெஞ்சு பகுதியில் கத்திக்குத்து விழுந்ததால் மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக பள்ளி முன்னாள் மாணவர் ஒருவர் (17 வயது) மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரையும் போலீஸார் கைது செய்து உள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai school student attempt murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->