#தமிழகம் | இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த சிறுவன்! சிக்கிய செல்போனில் பலபெண்களின் ஆபாச வீடியோக்கள்! - Seithipunal
Seithipunal


இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவனின் செல்போனில் பல்வேறு பெண்களை தகாத முறையில் எடுத்த வீடியோக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை : மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறையை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் கேட்டுள்ளது. 

உடனே அந்த பெண் வெளியே வந்து பார்த்தபோது, அந்த இடத்திலிருந்து வாலிபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த சிறுவன்தான் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததும் , அவனின் செல்போனில் இதுபோல் பல பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai mettupalaiyam bath video case


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->